கோடைக் காலத்தை  எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்! இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ...

நலம் தரும் பாரம்பரிய இயற்கை மருத்துவம் – 1 இன்றைய சூழலில் நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம்? நம் முன்னோர் `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவை தேர்வு செய்தனர். ஆனால், இன்றைக்கு நாம் உணவில் நிறைய தவறு செய்கிறோம், நோயை வலிந்து பெறுகிறோம். பாரம்பரிய உணவு பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு வெகுதூரம் வந்துவிட்டதால், புதுப்புது நோய்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து எப்படி விடுபடலாம்? காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நாம் உண்ணக்கூடிய உணவுகளை ...