நீண்ட கால ஆசிரியர்களின் பணியிட மாற்றக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்து இத்தனை நாள் ஆறப் போட்டுவிட்டு தற்போது அவசரம் காட்டினால் ஏற்படப் போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பது..? விருப்பப்பட்ட இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏதுவாக வெளிப்படையான கலந்தாய்வு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முன்னெடுப்பால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. கணவன் ஓரிடத்தில், மனைவி ஓரிடத்தில் என குடும்பங்களை பிரிந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் கேட்பதும், அந்தச் சூழ்லைப் பயன்படுத்தி கையூட்டு ஆதாயம் அடையும் அற்பர்களும் கல்வித் துறையில் ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜீ மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு ” நீதி பரிபாலனத்தை செவ்வன செய்யும் பொருட்டு” (better administration of justice) மாற்றப்படுகிறார் என்பது செய்தி. இச்செய்தி அனைவரையும் துணுக்கிட வைத்தது. காரணம் திடுதிப்பென்று இத்தகைய மாறுதலுக்கான காரணம் என்ன என்று எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டாலும் விவரம் அறிந்தவர்கள், ”இம்மாறுதல் ஒருவகையில் எதிர்பார்த்த ஒன்றுதான் , ஏனெனில், பானர்ஜீ தன்னிச்சையாய் நடக்க கூடியவர், அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுக்காதவர், உண்மை மற்றும் சட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை ...

விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின்  Transfer of Power in India  – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன்  விடுதலை இந்தியாவில் அதிக  வெளிச்சம்படாத மனிதர். ’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி ...