இன்றைய அரசியல்வாதிகளிலேயே மரியாதைக்குரிய அரசியல் பாரம்பரியமும், நீண்ட நெடிய நிர்வாகத் திறமையும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பெருமளவு விலகி நிற்பவருமாக ஒருவரை சொல்ல முடியுமென்றால், அவர் நிதீஸ்குமார் தான்! இன்னும் சொல்வதென்றால், மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி கொண்டவராகவும் பார்க்கப்பட்டவர்! குற்றச் செயல்களின் கூடாரமாக பார்க்கப்பட்ட லாலுபிரசாத்தின் 15 வருட ஆட்சிகால பீகாரை, குற்றச் செயல்களை குறைத்து,கல்வியறிவு பெற்ற,தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக வளர்த்தெடுத்ததில் நீதீஸின் பங்கு மகத்தானது! இதனால் தான் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மூன்று முறை ...