புகழ்பெற்ற  இலயோலா கல்லூரியை நடத்தி வருவது இயேசு சபை. இந்த சபையைச் சார்ந்தபாதிரியாரும், புகழ்பெற்ற சமூக சேவகருமான 83 வயதான, ஸ்டான் சாமி என்று அழைக்கப்படுகிற தனிஸ்லாஸ் லூர்துசாமி, தேசிய புலனாய்வு நிறுவனத்தால் அக்டோபர் 8 ஆம் தேதி  கைது செய்யப்பட்டுள்ளார்.ஏன் கைது செய்யப்பட்டார்? கார்ப்பரேட்டுகள் ஏழை,எளிய பழங்குடி மக்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து,தொழிற்சாலைகள் அமைப்பதை தடுத்து விளிம்பு நிலை மக்களின் அரணாக நின்றார் என்பதால் மத்திய அரசின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். இவரது கைதுக்கு மேத்தா பட்கர், அருந்ததிராய்,ஸ்பனாம் ஆஸ்மி,ஹர்ஸ்மந்தர், அபூர்வானனந்த்…உள்ளிட்ட ...