வேளாண் சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டதாக மோடி வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், அது தன் தவறுகளை உணர்ந்தோ, மனம் மாறியோ அல்லது விவசாயிகளின் போராட்டத்தில் உள்ள நியாயங்களைக் கருதியோ அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை என எவருமே உணரலாம்! அந்த அறிக்கை இப்படிச் சொல்கிறது; நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே ...

அண்ணாத்தே படத்தின் அதீதமான வசூல் செய்திகள் ஏதோ இதில் இடிக்கிறதே ..என களத்தில் தள்ளியது..! கதைக்கு ஏற்றார் போல நடிகர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன! நடிகருக்காக கதை உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பிளாப் ஆகின்றன! அந்த வகையில் அண்ணாத்தே படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர்களே கழுவிக் கழுவி ஊத்திவிட்டனர். படம் பார்த்தவன் எல்லாம் தங்கள் எதிரிக்கும் கூட இந்த அனுபவம் ஏற்படக் கூடாது ...