www.aramonline.in மூன்றாம் மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது..! பொய்மைகளாலும்,மாயைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஊடகச் சூழலுக்குள் ஒளிபாய்ச்சும் ஒரு சிறு அகல்விளக்காய் அறம் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த சுடரின் வீரியத்தை நீங்கள் நாளும் பல கட்டுரைகளில் பார்த்து வருகிறீர்கள்! பரப்பியும் வருகிறீர்கள்! பொது நலன் சார்ந்து, எந்த சமரசத்திற்கும் இடமில்லாமல் வெளிவரும் அறம் இணைய இதழை தொடர்ந்து வரச் செய்வது வாசகர்கள் பங்களிப்பில் தான் உள்ளது. சமூகத்திற்கான தேவை என்னவென்று நாம் உழைத்துக் கொண்டிருந்தால், நமக்கான தேவையை அந்த சமூகமே அக்கறை எடுத்துப் பார்த்துக் கொள்ளும் என்ற ஒரு ...