அமெரிக்காவில் குடியரசு கட்சியின் டிரம்ப் அடைந்துள்ள வெற்றி உலகம் முழுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை அடையாளப்படுத்துகிறது. நரகலான பேச்சுக்கள், நாகரீகம் இல்லாத நடத்தைகள், கார்ப்பரேட்கள் நலனே பிரதானம் என முழங்கிய டிரம்ப்பின் வெற்றி ஒரு அலசல்; இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது பாஜக ஆட்சியில் எப்படி எழுதப்படாத நியதியோ, அது போல டிரம்பின் ஆட்சியில் வெள்ளையரல்லாதவர்களுக்கு இரண்டாமிடம் என்பது எழுதப்படாத நியதியாக இருக்கும். பெண்களை அடக்கியாள வேண்டும் என்ற பிற்போக்கு கருத்தியலில்  இந்தியாவின் பாஜகவிற்கும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்கும் ...