அமெரிக்க தேர்தலில் இது வரை வந்த முடிவுகளை வைத்துப் பார்க்கையில் டிரம்ப் வெற்றிபெற வாய்ப்பில்லை என உறுதியாக சொல்லலாம்! ஆனால், இந்த தோல்வியை – மக்கள் தந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவமற்ற முரட்டுத் தனத்துடன் டிரம்ப் ஆத்திரப்படுவது அவரது குணத்தை வெளிப்படுத்துகிறது! தேர்தல் முடிவுகளில் பின்னடைவைக் கண்டுவரும் சூழலிலும், டிரம்ப் தன் ஆதரவாளர்களிடையே, ’’நாம் தான் உண்மையில் வெற்றி பெற்றுள்ளோம்.கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தோம்.ஆனால், ஏதோ சதி நடக்கிறது’’ என்றால், இதை எப்படி புரிந்து கொள்வது? அவர் தானே அதிபராக இருக்கிறார்..,ஏதாவது சதி செய்வதற்கான ...