35 ஆயிரம் கோடி சொத்துக்குரிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் சர்ச்சைக்கு பேர் போனது! பேராசிரியர் பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம், வாடகை வசூலில் மோசடி, அரசியல்வாதிகளின் தலையீடுகள்..என கதி கலங்கி கிடக்கும் நிர்வாகத்திற்கு தற்போது தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அழுத்தம் தரப்படுகிறது! தேர்தல் நடத்த என்ன தடை? தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக 35,000 கோடி பெறுமான சொத்துக்களோடு திகழ்வது பச்சையப்பன் அறக்கட்டளை! மிகப் பெரிய செல்வந்தரும்,வள்ளலுமான பச்சையப்பன் தன் கடும் உழைப்பால் சேர்த்த செல்வங்களை பொது நலன் சார்ந்து கல்விக்கு பயன்படுத்த உயில் ...