கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் இந்தியாவில் காட்டாட்சி நடத்தி வரும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் அஜய்மிஸ்ரா சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைக்க என்னால் முடியும்’’ என்று பேசி இருந்தார்! அதைதான் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தி பயமுறுத்தி பார்க்க முயன்றுள்ளார்! ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது என்பது அமைதியான வகையில் எதிர்ப்பை தெரிவிக்க செய்யும் ...