அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி(வரும் செவ்வாய் கிழமை) நடக்கவுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு! பலநாட்டு மக்கள்,பல இனமக்கள், பல கலாச்சார மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் சமூக கட்டமைப்பை கொண்ட நாடு என அமெரிக்கா பேர் பெற்று இருந்தாலும், அங்கு நடக்கும் தேர்தல்களிலும் அடாவடிப் பேச்சுகள்,அற்பமான வாக்குறுதிகள், நாடகத்தனமான போலி பிம்பங்களை கட்டமைத்து வாக்காளர்களை கவரும் முயற்சிகள் என யாவும் அரங்கேறத் தான் செய்கின்றன! அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் டிரம்ப் ,ஜோபைடன் ஆகிய இருவர் மீதும் பாலியல் புகார்கள் ...