எங்கெல்லாம் மதச் சிறுபான்மையினர் உள்ளனரோ.., அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்! வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாடும் போது முஸ்லீம்களால் தாக்கப்பட்டனர்! அதில் ஆறுபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் மூன்றுபுறமும் வங்காளதேசத்தால் சூழப்பட்ட திரிபுராவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது! வங்கதேசக் கலவரம் நடந்தது அக்டோபர் 15 தில்! அதைத் தொடர்ந்து திரிபுராவில் அக்டோபர் 22 தொடங்கி 27 வரை தொடர்ந்து கலவரம் நடந்துள்ளது. முஸ்லீம்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்! திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் மாணிக்சர்கார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி ...

அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..! நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான ...