பிரசாந்த் கிஷோர் திமுக தேர்தல் வெற்றிக்கு பொறுப்பு ஏற்றவுடன் கூறிய முதல் நிபந்தனை ”உங்க கட்சி மேல குடும்ப ஆதிக்க கட்சி என்ற பெயர் பரவலாக உள்ளது. ஆகவே, தேர்தல் வரை உங்கள் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் முக்கியத்துவம் தரும் எந்த நகர்வுகளும் இருக்கக் கூடாது” என்றார். ஆனால், பிரசாந்த் கிஷோர் பொறுப்பெடுக்கும் முன்பே இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு உதயநிதிக்கு வழங்கப்பட்டு விட்டது. அவர் பொறுப்பேற்றது முதல் அன்று திமுகவின் ஆலோசகராக இருந்த சுனில் தான் அவரது புரமோசன்களை கவனித்துக் கொண்டார். பிரசாந்த் ...