வரலாற்றைக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்வதும், துக்கபட்டுக் கொள்வதும் அவரவர் மன நிலை சார்ந்த விஷயம்! அதனால், நடந்த வரலாறு ஒரு போதும் மாற்றமடைய போவதில்லை! எந்த ஒரு நிகழ்வையும் ஆக்கம் சார்ந்து புரிந்து மேலெழவும் வாய்ப்புண்டு! ஆக்ரோஷம் கொண்டு புரிந்து அமிழ்ந்தழிந்து போகவும் வாய்ப்புள்ளது! இதில் இரண்டாவது வாய்ப்பை வலிந்து தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் தான் பாஜகவினர்! அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் ஆனந்தம் பெறமுடியாதவர்களாக உள்ளனர். காரணம், அவர்கள் மனதில் எந்த நேரமும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்மம் அவர்களை அமைதி கொள்ளவிடுவதில்லை! இதில் உத்திரபிரதேச பிரதேச முதல்வர் ஆதித்திய நாத் ...