இந்தியாவிலே உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ள லவ் ஜிகாத் சட்டமானது, இயற்கையான காதல் திருமணத்தை தடை செய்வதன் வழியே இயற்கையான மானுட உணர்வுக்கும், காதல் வாழ்க்கைக்கும் தடை ஏற்படுத்துகிறது. அங்கே போலீசாருக்கு தினசரி யார்,யாரை காதலிக்கிறார்கள் என தேடியலைந்து காதலர்களை கைவிலங்கிட்டு பிடிப்பது தான் பிரதான வேலையாகிவிட்டது! ஜனநாயக குடியரசு ஆட்சியில் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி மனித உரிமையை இந்த சட்டத்தின் மூலம் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது உ.பிஅரசு. இஸ்லாமிய மக்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, ஒடுக்க வழி செய்கிற இச்சட்டத்தின் பெயரால் ...
வேறு எதற்காகவும் ஆட்சி செய்ய வரவில்லை! ” இந்து மதத்தை வளர்க்கவும், மாற்று மதத்தவரை அச்சுறுத்தவுமே என் ஆட்சி’’ என தன் ஒவ்வொரு அசைவிலும் நிருபித்து வருகிறார் யோகி ஆதித்தியநாத்! பெயரில் தான் யோகி, ஆள் படுமுரட்டு சுபாவம்! இந்து மதத்தை அரசாங்கமே வளர்க்கும், போஷிக்கும் என்று களம் கண்டால், அதில், போலி ஆன்மீவாதிகளும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போட்டு ஊரை ஏய்க்கும் சாமியார்களுமே அதிகம் பயனடைவார்கள் என்பதற்கு உத்திரபிரதேசமே நல்ல உதாரணமாகும்! ஏனென்றால், உண்மையான ஆன்மீகவாதிகள் அதிகாரவர்க்கத்தை தேடிச் செல்லமாட்டார்கள்! எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்! ...