வல்லரசுகளின் கல்லறை ஆப்கானிஸ்தான் (பகுதி 1) வரலாறு நெடுக அடுத்தடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வரவேற்று, அவர்களுக்கு கல்லறை எழுப்பி வருகிறது ஆப்கானிஸ்தான்! எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பின்லேடனையும், தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா.., தான் விரித்த வலையில் தானே சிக்குண்ட கதையை பார்ப்போமா..? அமெரிக்க படைகளின் கடைசி விமானம் ,தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு கிளம்பியவுடன் தலிபான் படையினர் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  “இன்று ஆப்கான் நாடு அந்நியர் அனைவரையும் வெளியேற்றி சுதந்திர காற்றை சுவைக்கிறது”  என்று கொண்டாடத் துவங்கினர். ...