அடித்தட்டு மக்களின் கல்விக் கனவாக இது நாள் வரை திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையை அடியோடு சிதைத்து, அதை வசதியானவர்கள் மட்டுமே படிக்க முடிந்த இடமாக்கும் சூழ்ச்சி கவலையளிக்கிறது! மத்திய பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கல்வித்துறையை எளியோருக்கு எட்டாக்கனியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.தற்போது அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் நிதி உதவியைப் புறக்கணித்துவிட்டு, கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மாணவர்களிடையே வசூலிப்பதன்  மூலமாக நிர்வகித்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா ...