விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின் Transfer of Power in India – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன் விடுதலை இந்தியாவில் அதிக வெளிச்சம்படாத மனிதர். ’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி ...