சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறையின் ஒரு சுற்றறிக்கை மக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை கேள்விக்கு உள்ளாக்குவதாக – கட்டுப்படுத்தும் தோரணையில் – உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் நலன் சார்ந்து முடிவெடுத்து உயிர் வாழும் உரிமை உள்ளது! தடுப்பூசியை திணிக்கக் கூடாது என நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன!அதை உறுதிபடுத்துவதே அரசாங்கத்தின் கடமை! அதை மீறுவதாக அந்த சுற்றறிக்கை இருந்ததையடுத்து அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் மருத்துவர் பிரேமா! மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். தடுப்பூசி செலுத்தியவர்கள் ...