பெருந்தொற்று காலகட்டத்தை பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்ற போக்குகளுக்கு உலகம் எங்கும் எதிர்ப்புகள் வெடித்துள்ளன! ”அறிவியலின் பெயரால் அறிவுக்கு பொருந்தாத மூர்க்கத்தனத்தை திணிக்காதீர்கள்’’ என்று இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மக்களின் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது மருத்துவ துறையிலேயே தடுப்பூசிக்கு எதிரான முணுமுணுப்புகள் ஆரம்பித்துவிட்டன! மேலை நாடுகளில் முதல் எதிர்ப்பு மாஸ்க்கிற்கு தான்! கூட்டமான இடங்களில் செல்லும் போதும், அடுத்தவர்களிடம் பேசும் போதும் மாஸ்க் அணியுங்கள் என்றால் ஏற்கலாம்! ஆனால், ஒருவர் தனிப்பட்ட முறையில் வெளியில் நடைபயிற்சியில் இருக்கும் ...

அப்பாடா..! ஒரு வழியாக பிரதமர் வழிக்கு வந்தார்! லட்சக்கணக்கில் உயிரிழப்புகள், ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், தனியார் மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நடத்திக் கொண்டிருக்கும் பகல் கொள்ளைகள்..என எதை பற்றியும் கவலைபடாமல் இரண்டு தனியார் தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்தை பெருக்குவதிலேயே கண்ணும், கருத்துமாக இயங்கிய மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்றம் உலுக்கி எடுத்ததில் வழிக்கு வந்தது பாஜக அரசு! இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின் இலவச தடுப்பூசிகள் அம்மை, காலரா போன்ற நோய்களுக்குப் போடப்பட்டு வந்தன,  என்றாலும் 1978ல் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாகப் ...

‘தடுப்பூசி உற்பத்தியை தடை செய்து சுகாதாரத் துறையை சூறையாடிய அன்புமணி’ என்ற கட்டுரையை நமது அறம் இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தோம்! அதற்கு விரிவான ஒரு மறுப்பு கட்டுரையை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் திரு.அன்புமணி நமக்கு அனுப்பினார். அந்த மறுப்பு பிரசுரமாகியுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தன்னிறைவை அழிக்கவில்லை,அடித்தளமிட்டேன் தடுப்பூசி விவகாரத்தில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன! அவர்கள் வைத்ததே விலை! 138 கோடி மக்களின் உயிர் அவர்கள் தயவில் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை அன்புமணி ...

பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் தடுப்பூசி குறித்து பரத்பூஷன் என்பவர் கடந்த 17-ஆம் தேதி  எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்து அறம் இணையதளத்தில்  கடந்த மே 23-ஆம் தேதி  வெளியிடப்பட்ட கட்டுரைக்கான  என்னுடைய ( அன்புமணி ராமதாஸ்) பதில் கட்டுரை; தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் தன்னிறைவை நிலையை நான் தான் அழித்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தடுப்பூசி உற்பத்தி மற்றும் கொள்முதலை அரசிடமிருந்து தனியாரின் கைகளுக்கு மாற்றி விட்டதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அபத்தமானவை; அந்தக் குற்றச்சாட்டுகளில் ஒரு துளி கூட ...

138 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா,  கொரோனாவை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தயவை எதிர்பார்த்து காத்து, விழி பிதுங்கி  நிற்கிறது. இந்தியாவில் அரசின் பொதுத் துறை தடுப்பூசி தன்னிறைவு குலைந்தழிந்து போனதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்  அன்புமணியே காரணம்! – ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்துகிறது! ‘’தடுப்பூசி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாகத் திகழ்ந்த நமது இந்தியா இன்று இரண்டு தனியார் நிறுவனத்தின் தயவை நம்பி இருப்பது ஏன்?’’ என்ற கேள்வி இன்று அனைவர் மனதிலும் எழுகிறது! மே 8 ஆம் தேதி ஒரு ...

எல்லோரையும் சட்டம் போட்டு முடக்கிவிடறாங்க..ஆனா, கொரோனாவை முடக்க வழி தெரியல! தீர்வு என்ன என்று தெரியாமல் குருட்டாம் போக்கில் ஏதாவது செய்தாக வேண்டுமே என நினைத்து செய்யப்படுவது தான் ஊரடங்கு! ‘’இதுவும் தீர்வாகுமா பார்ப்போமே..’’ என்ற நம்பிக்கையே தடுப்பூசி..! மொத்ததில் சிக்கலை அதிகப்படுத்துகிறோம்! தீர்வை கண்டடைய முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சக்திக்கு மீறி வேலை பார்த்து சோர்வுற்ற வண்ணம் உள்ளனர்! புதிதாக பொறுப்பேற்ற அரசாங்க தலைமையும் சரி, அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் சரி பம்பரமாக சுற்றிச் சுழன்று ...

எப்போது தடுப்பூசி ஒரு பேரியக்கமாக தொடங்கப்பட்டதோ ..அப்போது முதல் கொரோனா இரண்டாம் அலையும் அதற்கேற்ப வீரியம் கொண்டு வருகிறது என்றால், தடுப்பூசிக்கும், கொரோனா பரவலுக்கும் என்ன தொடர்பு…? கட்டுப்படுத்த முடியாத கொரோனா பெருக்கத்திற்கு என்ன காரணம்..? இன்றைக்கு நம் அரசுகள் நோய் தீர்க்கவென்று நீர்பந்திக்கும் அணுகுமுறைகளே காரணம்! இந்த மருந்தை தான் உட்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியால் தான் நோய் தொற்றை தவிர்க்க முடியும் என அரசாங்கம் நமக்கு அடையாளம் காட்டி நிர்பந்திப்பதன் வழியாகத் தான் நோய் வீரியம் அடைகிறது என்ற குற்றச்சாட்டு பல ...

இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை. ...

சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை பதிவு செய்ததோடு சரி! உலகம் இன்று சர்வதேச கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிக் கொண்டு உள்ளது. நான் வெளிப்படையாக பேசுகிறேன். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளின் மக்களும், அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்” என மூன்று மாதங்களுக்கு முன்பு (ஜனவரி 18, 2021) நடந்த உலக ...

நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்யப் போவதாக அச்சுறுத்துவதின் வாயிலாக என்ன சொல்ல வருகிறீர்கள்! சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது! விலங்கு தான் பூட்டுவோம் என்கிறீர்களா…? அவர் பேசியது விவேக் சாவிற்கு முன்பு! கோடானு கோடி மக்கள் மனதில் இருந்த ஒரு சிறிய சந்தேகப் பொறியைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமெங்கும் இதை நீங்கள் காணலாம்! தேனீர் கடை தொடங்கி தெருவீதி சந்திப்புகள் வரை மக்கள் இந்த சந்தேகத்தை தான் விவாதித்து தீர்க்கிறார்கள்! நடிகர் விவேக்கை பொறுத்த வரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை ...