இறந்தவர் பிரபல நடிகர் என்பதை தாண்டி தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்திற்கான தூதுவர் என்பது மிக முக்கியம். விவேக் 15.04.2021 அன்று பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவர்களின் முன்னிலையில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் , பொது சுகாதாரத் துறையின் மேன்மை ,கொரோனாவிழிப்புணர்வு ஆகியவை குறித்துபேச வைக்கப்படுகிறார். ஆனால்,16.04.2021 காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். 17.04.2021 அன்று காலை 04.35 மணி அளவில் ரத்தக் ...
தடுப்பூசி தொடர்பான ஆர்வங்கள், விவாதங்கள் வேகம் பெற்றுள்ளன! ”தடுப்பூசி வந்தால் நிம்மதிப்பா..அதப் போட்டுகிட்டு எங்க வேணா பழையபடி போகலாம்…எவ்வளவு நாள் பயந்து,பயந்து வெளியில போறது’’ என பலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் வீட்டைவிட்டு வெளியேறப் பயந்து முடங்கியுள்ளனர். வெளியே வருபவர்களும்,பயங்கர முன்னெச்சரிக்கையுடன், பதற்றத்துடன் நடமாடிக் கொண்டுள்ளனர். ஆகவே, தடுப்பூசி வந்தால் நல்லது என நினைப்பது ஆச்சரியமில்லை! அப்படிப்பட்டவர்கள் இந்த கட்டுரையை மூன்று நிமிஷம் படியுங்கள். எல்லா கொடிய நோய்களும் நாம் சூழலியலுக்கு செய்யும் தவறுகளாலும், நமது பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளிலிருந்து விலகியதாலும் ...