”ஒருவரின் தனிப்பட்ட பலவீனத்தை முன்வைத்து அவரது இலக்கிய, கலை ஆளுமை திறமைக்கான விருதினை தரக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.. ”என்கிற வாதம் பரவலாக முன்வைக்கப்படுகிறது!. பாடகி சின்மயி உட்பட பதினேழு பேர் வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகார் செய்துள்ளனர். இது தெரிந்தும் அவருக்கு எப்படி விருது வழங்கலாம் என்ற பெண்களின் வலியை இப்படித் தான் மடார் என ஒரே போடில் தவிடு பொடியாக்கிவிடுகின்றனர்,சிலர்! மேம்போக்காக பார்க்கையில் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும். ஆனால் வைரமுத்துவுக்கு தரப்பட்ட விருது கார் ...
இந்த விவகாரத்தை மீண்டும், மீண்டும் பேசுவதும், எழுதுவதும் சலிப்பாக உள்ளது! வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை என்ன..? சின்மயிக்கு ஏதாவது உள் நோக்கங்கள் உள்ளனவா? தனிமனித பலவீனங்களை சமூக அங்கீகாரத்திற்கு தடையாக்கலாமா..? ஒரு படைப்பாளியையும், அவன் படைப்புகளையும் பிரித்து பார்க்க வேண்டுமா..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விவகாரம்..! பல்வேறு குழப்பங்கள், குதர்க்கங்கள் நிறைந்த இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு பிறக்க இந்த கட்டுரை உதவலாம் என நினைக்கிறேன். முதலாவதாக இந்த விவகாரத்தை சாதிப் பற்று, மொழிப்பற்று, கட்டமைக்கப்பட்ட இமேஜ் ...
தமிழ் வழி கல்வி கற்பதும், தமிழ் மொழியை கட்டாயம் கற்பதும் தமிழ் மொழியின் மீது நம்பிக்கை கொள்வதும் நம் தலையாய கடமை. ’தமிழனமே தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை எனில், எந்த இனம் நம்பிக்கை கொள்ளும். முதலில் பெற்றோர்கள் தமிழின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெருகிவரும் ஆங்கில வழி பள்ளிகளால் 50 ஆண்டுகளுக்கு பின், நம் மொழி வெறும் பேச்சுமொழியாக மட்டும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு இந்த ஆபத்து வரலாம். வரக்கூடும். எந்த மொழிக்கும் வரக்கூடாது ...