வள்ளலார் மறைந்து 145 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தமிழ்நாட்டு அரசாங்கம் அவரை கெளரவித்து உள்ளது! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்! வள்ளலாருக்கு வடலூரில் 72 ஏக்கர் பரப்பளவில் பெரிய மணிமண்டபம் கட்டும் முயற்சியையும் இந்த அரசு மேற் கொண்டு வருகிறது! வள்ளலார் சென்னை தங்கசாலையில் வாழ்ந்த இடத்திற்கு அண்மையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற போது சொன்னார். முதன்முறையாக வள்ளலார் இல்லம் வந்த அமைச்சர் நான் ...