இப்படியும் ஒரு ஜோதிடர் இருக்க முடியுமா? என்று வியக்கும்படி மனித நேயத்துடன் வாழ்ந்தவர் நெல்லை வசந்தன். தெய்வீகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஜோதிட அறிவை பணம் பண்ணும் கருவியாக எண்ணாமல், மற்றவர்கள் பலன் பெற உபயோகித்தவர்! உலக அளவில் ஜோதிடத்தின் அடையாளமாக கருதப்படுபவர் பிரான்ஸ் நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் பிறந்த நாஸ்டர்டாம்ஸ்! அவரின் கணிப்புப்படியே உலகில்  பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன என இன்றும் நினைவு கூறப்படுகிறார். அதே போல, நாம் வாழும் இந்த காலத்தில் அப்படிபட்ட ஒரு மிகப்பெரிய கணியர், நமது தமிழகத்தில் வாழ்ந்துள்ளார் என்றால், அவர் ...