இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக? மத்திய அரசு வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன. கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே. ...