வீரப்பன் குழுவினர் மரணத்தில் மர்மங்கள் தொடர்கின்றன. காவல் துறையின் திரைக் கதைக்கும், உண்மைக்குமான இடைவெளி அதிகம். அவருக்கும், புரட்சிகர இயக்கங்களின் தோழர்களுக்குமான உறவுகள் எப்படி இருந்தன? இதில் பொய்களும், அவதூறுகளும் ஏன் கட்டமைக்கபடுகின்றன என்பதை பார்ப்போம்; தமிழ் நாட்டில் காவல்துறையின் என்கவுண்டர் கலாச்சாரம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் சுமார் 20 பேர் போலி மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகையதொரு சூழலில் வீரப்பன் குழுவினர் அதிரடிப்படையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக பரப்பபடும் வதந்திகளைக் கடந்து உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. ...