எதை ஒன்றை சாதிக்க வேண்டும் என்றாலும், குடும்ப பின்புலமோ,பொருளாதாரப் பின்புலமோ தேவை என்பது இந்தியாவில் எழுதப்படாத நியதியாக உள்ளது. மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடிந்த பைக்ரேஸில் ஒரு கூலி தொழிலாளியும் சாதிக்க நினைத்தால் அது சவால் தானே? சென்னை-மந்தைவெளி ஏ.எம்.கார்டன் குடிசை மாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அப்பா தையல்காரர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். சிறுவயது முதல் பைக் தான் உயிர். படிப்பு ப்ளஸ் டூ தான்! மெக்கானிக் செட்டில் வேலை. அங்கு வரும் கஸ்டமர் ஒருவர் ...