போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்! ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது ...
‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து! ”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ...
அதிகார பலத்தால் எல்லாம் வல்லவர்களாக தோற்றம் காட்டலாம்! ஆனால், விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகளே பாஜக ஆட்சியாளர்கள்..! என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே சாட்சியாகிறது! ‘’விமர்சிக்கிறாயா..? எப்.ஐ.ஆர், தேசத் துரோக வழக்கு, கோர்ட், ஜெயில்..’’ அப்படின்னு இனி பயப்பட வைக்க முடியாது…! ஜனநாயகத்தை காப்பாற்ற நீதிமன்றம் துணையிருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது! மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா வட இந்தியாவில் பிரபலமானவர்! தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்கி வருபவர்! இவர் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஒரு ...