ஆணவக் கொலைகளை மையமாக வைத்து “பாவக் கதைகள்” என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. சாதி கெளரத்திற்காக கொடுர கொலைகளை செய்வதாக காட்சிப்படுத்தப்படும் கதைகளை படமாக்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப்படம் நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது! ஆனால், அவ்வாறு கொலை செய்வதை காட்சிப்படுத்தப்படும் அணுகுமுறையில் இவ்வித பாவச் செயலை செய்வதை நியாயப்படுத்துகிறார்களா? அல்லது குற்றமென ரசிகர்களை உணர வைக்கிறார்களா…? இந்தக் கதைகள் சமூகத்தில் ஏற்படுத்த விரும்பிய தாக்கம் என்ன..? என்பது குறித்து திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன், பீட்டர் துரைராஜிடம் பேசியவை; ‘பாவக் கதைகள்‘ படம் குறித்து ...