வலிமை பொருந்தியவர்கள் நிலத்தையும், வளத்தையும் மட்டுமல்ல, வரலாற்றையும் ஆக்கிரமித்து தங்களுக்கானதாக ஆக்கிவிடுகிறார்கள். குடியேறிகளின் தேசமான அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிகள் தங்கள் பூர்வீக நிலத்தை கண்டடையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இணைய தளம் குறித்த அரிய தகவல்கள்; அமெரிக்கா யாருடைய நிலம்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ’நேட்டிவ்லாண்ட்.கே (https://native-land.ca/) இணைய தளம். இந்த தளத்தின் நோக்கத்தையும், இதன் செயல்பாட்டுத் தன்மையையும் தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும். அதோடு இணையத்தின் சாத்தியங்களை நினைத்தும் ஊக்கம் உண்டாகும். அமெரிக்கா குடியேறியவர்களின் தேசம். அந்த நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு ...











