எப்படியோ சிரமப்பட்டு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவுகளை பெற்ற நிலையில், பதவி ஏற்க உள்ளார் விஜய். ஆனால், இந்த ஆதரவு அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதை அவதானிக்கும் போது அவ நம்பிக்கையே துளிர்க்கிறது. நித்திய கண்டமாக அமையவுள்ள ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா? ஒரு அலசல்; செம திரிலிங்காக போய்க் கொண்டுள்ளது உள்ளது, தமிழக அரசியல்! பலருடைய புனித பிம்பங்கள் பல்லிளித்துவிட்டன! திமுக தயவில் முதலமைச்சராக ஆசைப்பட்டு எம்.எல்.ஏக்களை பாண்டிச்சேரியில் வைத்து காபந்து செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. ”பாஜகவின் முகமுடியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க ஒத்துழைக்கமட்டோம்” என்ற ...


















