எல்லா நியாயங்களும் தங்கள் பக்கம் இருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ‘சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தை அணுகி இருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ‘அரசு தரப்பில் தவறில்லை’ எனில், தயக்கம் எதற்கு? உண்மை என்னவோ, அது வெளிவரட்டுமே; ‘அரசு தரப்பில் எந்தத் தவறுமில்லை’ என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கியது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தர முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஓடோடி வந்து உதவியது என்ற வகையில்.. ...
நீதிபதிக்கு தானும் ஒரு ஹீரோவாக திடீர் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும்! நடிகர் விஜய்க்கு வரி விலக்கு தர மறுத்திருந்தால் அதை யாரும் விவாதிக்க இடமில்லை. ”வரி கட்டத் தகுதியானவர் தான், சட்டப்படி அவர் வரி தந்துவிட்டு போகட்டுமே’’ என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், வரி விலக்கு கேட்டதைக் கொண்டே, அவர் வரி ஏய்ப்பு செய்வதாகக் கூறி நீதிபதி அவர்கள் மிக காட்டமாக பேசியுள்ளார். இது ஏதோ தனி நபர் தாக்குதல் போன்ற தோற்றத்தை தருகிறது. ”லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் ...
















