அரசியலில் எந்த ஒரு கட்சியும் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் நிச்சயமாக ஒரு எதிரி தேவை! எதிரியை அடையாளப்படுத்தாதவர்கள், தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்துவிடுவார்கள்! இருதுருவ அரசியலின் ஈர்ப்பே உலகை இயக்கிக் கொண்டுள்ளது! அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் அடிப்படைத் தன்மையில் வேறுபட்டவை! ஜனநாயகக் கட்சி பன்மைத்துவ தன்மை கொண்டது. கறுப்பர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை அரவணைத்து செல்லும் கட்சியாக உள்ளது! குடியரசுக் கட்சி வெள்ளையின மக்களின் உயர்வு, தாழ்வு கொள்கையை உள்வாங்கிய கட்சியாகும்! ஜார்ஜ்புஷ், ரொனால்டு டிரம்ப் ஒரு எக்ஸ்டீரிம் என்றால் ஒபாமாவும், ஜோபைடனும் அதற்கு ...