தகுதிக்கு மீறிய வகையில் தன் பிம்பங்களை கட்டமைத்து வித்தை காட்டும் சினிமா ஹீரோக்கள் மத்தியில் கதாபாத்திரத்திற்குள் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வதற்கு மேலாக எதையும் மிகையாக முயற்சிக்கமாட்டார்! கதாநாயகனுக்குரிய அனைத்து மாயைகளையும் கட்டுடைத்த இயல்பான மனிதன்! இந்த வகையில் தான் விஜய் சேதுபதி மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு கலைஞனாக வலம் வருகிறார் என்று தோன்றுகிறது! பொதுவாக சினிமா என்ற மீடியாவால் பொய்யானவர்கள் நல்லவர்களாகவும், அயோக்கியர்கள் உத்தமர்களாகவும் தோற்றம் பெற்று விடுகின்றனர்! இப்படி அவர்கள் தோற்றம் பெற பத்திரிகைக்காரர்களும் தங்கள் பங்கிற்கு துணை போவார்கள்! அப்படி ...
800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதா? தொடர்வதா? என்பதை ஒரு விவாதமாக்கிவிட்டார்கள்..! 800 படத்திலிருந்து விஜய் சேதுபதியை விலகச் சொல்வதும்,முத்தையா முரளிதரனை எதிரியாகச் சித்தரிப்பதும், இலங்கையில் வாழும் நமது இந்திய வம்சா வழித் தமிழர்களான மலையகத் தமிழர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும். மலையகத் தமிழர்களுக்கு கேட்க யாரும் நாதியில்லை என்ற மனோபாவம் தானே! ஈழத் தமிழர்களுக்காக உருகுபவர்கள் ஒடுக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் இருந்து எழுந்து, இன்று ஒரு உலக கிரிக்கெட் சாதனையாளனாக பார்க்கப்படும் முத்தையா முரளிதரனை எதிர்ப்பது என்ன நியாயம்? இனவெறுப்பு அரசியல் இலங்கையிலேயே விடை பெற்றுக் ...