இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 75,000 பேருக்கு ஒரு நீதிபதி என்பது தான் நிலைமை! ஆகையால் மலை போல ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேங்கியுள்ளன! குறிப்பாக நமது கிராப்புற மக்களின் சுமார் மூன்று கோடி 14 லட்சம் வழக்குகள் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன….! நிலத் தகராறுகள் தொடங்கி கணவன்,மனைவி பிரச்சினை, உறவுகளுக்குள்ளான மோதல்,வாய்ச் சண்டைஉள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட தலைமுறைகளைக் கடந்து கிராமத்து எளியமனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ,அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும்,கிராம மக்களுக்குஅவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி எளிய ...