அச்சத்தில் தமிழக அரசு!  ஆத்திரத்தில் கிராம மக்கள்..! காந்தி ஜெயந்தியன்று கிராமசபையைக் கூட்டி விவாதிப்பதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பாடாகி வந்த நிலையில்,அதிரடியாக தீடிரென்று கிராம சபைக் கூடக்  கூடாதென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற முடியாவிட்டாலும் ஆண்டுக்கு நான்கு முறையேனும் நடத்த வேண்டும் என்ற வழமை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்தது! அதன்படி குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே1,சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடந்து வந்தது. ...