போதைப் பொருள், ரத்தம் தெறிக்கும் கொலைகள், இடையறா வன்முறை..இதுதான் விக்ரம்! முழுக்க முழுக்க இருள் சூழ்ந்த வன்முறைக் காவியமாக உருவாகியுள்ளது புதிய விக்ரம்! விட்டில் பூச்சிகளான இளம் இரசிகர்களுக்கு இது ‘வேற லெவல்’-ஆக இருக்கலாம். ஒரு தேர்ந்த கலைஞனான கமல் தயாரித்த படமா இது? படு குப்பை! உலகில் உள்ள அத்துணை ஆயுதங்களையும் காட்டிக் கொண்டு, படம் முழுக்க இரத்தக் கவிச்சை அடிக்கும் பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, போதைப் பொருளைப் பயன்படுத்துவது ஆண்மைக்கு அழகு என்பதைப் போல சித்தரித்துக் கொண்டு இப்பொழுது தமிழர் வாழும் நிலமெல்லாம் ...
புரட்சிக்கும், புதிய பாதைக்கும் பெயர் போன மேற்கு வங்கம், அரசியல் வன்முறை கலாச்சாரத்திலும் நம்பர் ஒன்னாகும்! அரசாங்கத்தைவிட, அரசியல்வாதிகளுக்குத் தான் அங்கு பவர் அதிகம்! பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம், ஒரு கொலைக்கு பல கொலைகள் எனத் தொடரும் அராஜக அரசியலுக்கு அத்தாரிடியே மேற்குவங்கம் தான்! இதற்கு காரணம், மேற்கு வங்க சமூகமே அடிப்படையில் கட்சி அடிப்படையிலான சமூகமாகும்! அது அவ்வாறாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அன்றாட மக்கள் வாழ்க்கையில் குடும்பம், சாதி, மதம் , அரசு,போலீஸ் ஆகிய அமைப்புக்கள் செலுத்தும் ஆளுமையைவிட கட்சி ...
நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கியுள்ள தீர்ப்பில், ஆண் என்பவர் ஆண் தான். சட்டம் என்பதும் சட்டம் தான். பலாத்காரம் என்றால், அது பலாத்காரம் தான். பலாத்காரம் செய்வது கணவனாக இருந்தாலும், பலாத்காரத்திற்கு ஆளாவது மனைவியாக இருந்தாலும் பலாத்காரமே.’’ எனக் கூறியுள்ளார். ”என் மனைவி தானே. என் விருப்பத்திற்கு அவள் தட்டாமல் பணிந்து போக வேண்டும் என அதிகாரம் செய்வது மனிதாபிமானமற்றது! ஆகவே, விருப்பமில்லாத மனைவியை நிர்பந்தித்து உறவு கொள்வதோ, அதற்காக துன்புறுத்துவதோ ஏற்கதக்கதல்ல” என்கிறது தீர்ப்பு. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கிய ஒரு ...
எங்கெல்லாம் மதச் சிறுபான்மையினர் உள்ளனரோ.., அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்! வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாடும் போது முஸ்லீம்களால் தாக்கப்பட்டனர்! அதில் ஆறுபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் மூன்றுபுறமும் வங்காளதேசத்தால் சூழப்பட்ட திரிபுராவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது! வங்கதேசக் கலவரம் நடந்தது அக்டோபர் 15 தில்! அதைத் தொடர்ந்து திரிபுராவில் அக்டோபர் 22 தொடங்கி 27 வரை தொடர்ந்து கலவரம் நடந்துள்ளது. முஸ்லீம்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்! திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் மாணிக்சர்கார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி ...
மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில் இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற சில பிரிவினர் மற்றவர்கள் பார்வையிலேயே படக்கூடாது. ...