பத்திரிகையாளர் என்பது சமூக தளத்தில் ஒரு மரியாதைகுரியக் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளர் சட்டங்களிலும் அந்த பார்வை இருந்தது. நான்காவது தூண், சுதந்திரத்தின் அளவுகோல் என்றெல்லாம் கூறப்படும் ஊடகத்துறையில், அதன் பணியாளர்களான பத்திரிகையாளர்களை புதிய சட்டங்கள் நடுத்தெருவிற்கு இழுத்து வந்து பணிப் பாதுகாப்பின்றி நிறுத்தியிருக்கிறது. ’கடமையைச் செய்வோம், உரிமைகள் பெறுவோம்’ என தலை நிமிர்ந்து வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர்களை முதலாளிகளின் கருணைக்காக காத்திருக்க வேண்டியவர்களாக்கிவிட்டன, இந்த சட்டங்கள். இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்! உழைக்கும் பத்திரிகையாளர் மற்றும் இதர செய்தித்தாள் ஊழியர்கள் ...