விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...