கோடைக் காலத்தை  எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்! இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ...

மருத்துவ வல்லுநர் குழுவின் எதிர்ப்பை பொருட்படுத்தால், மூர்க்கதனமாக குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டிய அவசியம் என்ன? மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை சிறார்களுக்கு கைவிடக் கூறி, மக்கள் மருத்துவ கூட்டமைப்பு கோரிக்கை! கடந்த  மூன்று அலைகளிலும் கொரானா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறார்களின் சதவீதம் 0.02 தான். இந்தத் தொற்று நோய் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை  பாதிக்காது என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் சொன்ன பிறகும் “தடுப்பு மருந்து, தடுப்பு மருந்து “என்று இவர்கள் ஏன் அலைய ...

சித்த மூலிகைகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி நிருபணம் செய்யும் ஆய்வு நோக்கத்திற்கு தொடர்ந்து தடைகள்! ஆயிரக்கணக்கான கோடிகளை  ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு ஒதுக்குகின்ற மத்திய ஆட்சியாளர்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்றால், நிதி ஒதுக்க மறுத்து சிடுசிடுக்கிறார்கள்! ஆயுர்வேத மருத்துவ துறை வளர்த்தெடுக்கப்பட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது ஒன்றிய அரசு! இதனுடன்  முகலாய பாரம்பரியம் கொண்ட யுனானி மருத்துவம் கூட வட இந்தியா முழுவதும்   குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது! ஆனால், சித்த மருத்துவம் மட்டும் தொடர்ந்து  நூறு சதம் புறக்கணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. மற்றவை ...

இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை  உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசின் கடமையாக்கவுமான சட்டத்தின் தேவையை பேசுகிறது இக்கட்டுரை! அறப்போர் இயக்கம்,  பொதுமக்கள் 2000 பேரிடம் ஒரு இணையவழி ஆய்வு நடத்தியது. அரசுத் துறைகளின் சேவையைப் பெறும் பொழுது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 93% பேரும், கசந்த அனுபவங்களைப் பெற்றதாக 82% பேரும், குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் சேவை பெறும் ...

‘மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கு’  என்று சுவரில் எழுதி வைத்து இருப்பதை   சிறுவயதில்  பள்ளிக்கு நடந்து போகும்போது பார்த்து இருக்கிறேன். அதன் அருகில் பெரியார் படத்தை வரைந்திருப்பார்கள்.  ‘மண்டல்’ என்பது ஒரு  பெயர் என்பது உயர்நிலைப்பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு அப்போது தெரியாது. வி்.பி. சிங் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் மண்டல் என்ற பெயர் இல்லாத செய்திப் பத்திரிகைகளைக்  காண முடியாது. 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ...

“சிவபுரம் சிவாயசி”என்கிற சிவனடியார்கள் அமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் சமீபத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவ தார்ணா மலர்மகள் பேட்டியின்போது கூறியது: “இந்தியாவில் , அகதி முகாம்களில் 65 ஆயிரம் ஈழத்தமிழர்களும் முகாமுக்கு வெளியே சுமார் 35 ஆயிரம் ஈழத்தமிழர்களும் வசிக்கின்றனர். இவர்களுக்கு  பல்வேறு உதவிகள் சலுகைகளை அரசு வழங்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரு வலி நிறைந்த வாழ்க்கை சூழலிலேயே இவர்கள் வாழ்கிறார்கள் ! அகதி முகாம்களில் பிறந்து வாழ்ந்த ஒரே காரணத்திற்காக மிகச் சிறந்த மாணவ மாணவியர் எத்தனையோ ...

இந்தியாவை 100 பகுதிகளாகப் பிரித்து, அவையாவும் டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் கோல்வால்கர் வலியுறுத்தி வந்தார்! மாநில அரசுகளே இருக்கக்கூடாது என சொல்லி வந்தார். ஆர் எஸ் எஸ்ஸும், அதன் அரசியல் முகமான பாஜகவும் கூட்டாட்சி முறைக்கும், மொழிவழி மாநிலங்களுக்கும் எதிரானவை ! மாநில கலாச்சார ,மொழி அடையாளங்களை, அவற்றின் தனித்தன்மைகளை அழித்து ” ஒரே நாடு, ஒரே மக்கள்” என கோஷமிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம் ! தமிழ்நாட்டை  ...