ஒருபுறம் உக்ரைனை உசுப்பிவிட்டுக் கொண்டே, மறுபுறம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, ரஷ்யாவை மண்டியிட வைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறாக முயற்சிக்கின்றன. இந்த சிக்கலில் இந்தியா  மதில் மேல் பூனையாக தடுமாறுவது  கேள்விகளை எழுப்பியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு உண்மையில் செய்ய வேண்டியது என்ன? கிட்டத்தட்ட இருபதாயிரம் இந்தியர்கள் (இவர்களில் மாணவர்கள் அதிகம்) உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்ற சூழல் உள்ளது. இவர்களுக்கு உதவ இந்திய அரசு முன் கூட்டியே எந்தவித முன்னேற்பாடும் செய்யாததால் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசின் மெத்தனப்போக்கை ...

நடைபெற்றுவரும்,போர்க்களக் கொடூர காட்சிகளில் பற்றி எரியும் கட்டிடங்கள், சிதறிக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது! இவற்றை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பதற்றத்துடனும், சொல்லொண்ணா வேதனையுடனும் பார்த்துக் கொண்டுள்ளனர்! தற்போது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் மக்கள் ரத்தமும், சதையுமாக ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ஒன்றாக வாழ்ந்து வந்த  சகோதரர்கள். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தாக்கி மாபெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சோவியத் யூனியனில் ஓர் அங்கமாக இருந்து பின்னர், பொதுவான புரிதலுடன் பிரிந்து போன 15 நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். ...

உக்ரைன் மீது ரஷ்யா படை போர் தொடுத்தது என்று மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் ரஷ்யாவை குற்றம் சாட்டுகின்றன! அப்படியானால், உக்ரைனில் உள்ள ஒரு பகுதி மக்கள் ரஷ்யாவை ஏன் வரவேற்கிறார்கள்? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் எப்படி வீழ்ந்தது உக்ரைன்? அவர்களின் சூழ்ச்சி என்ன? இந்தச் சூழலில், உக்ரைனின் இனப்படுகொலையைத் தடுக்கவே இந்த ராணுவ நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் ; நாங்கள் ஒருபோதும் உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதில்லை‘ என்று ரஷ்யா கூறியுள்ளது கவனிக்கத்தக்கது! ஒரு வகையில்,இந்தச்சூழல் நமக்கு வங்க விடுதலையை நினைவூட்டுகிறது. ஏனெனில், ...

உக்ரைன் நாட்டைச் சுற்றி ரஷியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன! ”ரஷியாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்போம், ரஷ்யா அத்துமீறினால் வரலாறு காணாத போர் மூளும்!” என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. போர் மூளுமா? உண்மையான கள நிலவரம் என்ன? குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உக்ரைனுக்காக உருகி பேசுகின்றன! .  மேற்கத்திய நாடுகளும், நேட்டோ அமைப்பும் தொடர்ந்து ரஷ்யாவை எச்சரிப்பதன் மூலம் ஐரோப்பாவில் யுத்தம் எப்பொழுது வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன? ஏன் இந்த பதற்றம்?  உண்மையில் ...

திடீரென்று அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்.எஸ்.எஸ் பாய்கிறதே..? ஏன் இந்த பாய்ச்சல்..? இதன் பின்னணி என்ன..? அமேசான் இந்தியாவில் மிக வெற்றிகரமாக இயங்கும் பிரதான நிறுவனமாக உள்ளது! இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளிலும் அமேசான் தான் முதலிடத்தில் உள்ளது! தற்போது அமேசான் முதல் முறையாக ஈகாமர்ஸ் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி வெல்த் மேனேஜ்மென்ட் துறையில் முதலீடு செய்து வருகிறது. அமேசான் நிறுவனம் ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 40 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுச் சுற்றில் முதலீடு செய்துள்ளது!அமேசான் இந்தியாவில் நேரடியாக ஒரு ...

சீனா ஒரு ஆபத்தான நாடு என்பதில் சந்தேகமில்லை. அது உலக அளவில் ஒரு ஆக்கிரமிப்பாளராக உருமாறி வருகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை! ஆனால்,தற்போதைய சீன இந்திய மோதலுக்கு சீனா மட்டுமே காரணம் என்றால்,அது நம்மை நாமே ஏமாற்றுவதாகத் தான் முடியும்! ரஷ்யாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கும்,சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவை இரு நாடுகளாலும் எட்டமுடியவில்லை!  அதற்கு முன்பு ராஜ்நாத்சிங் சீன அமைச்சரிடம் பேசியது பலனளிக்கவில்லை. இரு தரப்புமே ஒன்றையொன்று நம்ப தயாராயில்லாததே காரணமாகும்! எல்லையில் எந்த நேரம் ...