போரூர் ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  பரப்பளவில் தற்போது பாதி அளவு தான் உள்ளது.தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படும் இந்த ஏரியைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அப் பகுதி  சமூக ஆர்வலர்கள்  வருந்துகின்றனர். பல லட்சம் மக்களின் தண்ணீர் ஆதாரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது! சென்னை மாநகரைப் பொருத்தவரை 1970 இல் மக்கள் தொகை 30 லட்சம். இப்போது ஒரு கோடியை தாண்டிவிட்டது. சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தற்போதுள்ள  நிலைமைக்கு ஏற்ப தொலைநோக்குத் ...

சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்கிட, காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர ரூ.5000 – ரூ6000 கோடியில் சிறப்புத் திட்டம் ஒன்று விரைவில் செயற்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். ஆனால், நீர்வள வல்லுநர் டாக்டர் எஸ்.ஜனகராஜன் ‘இது ஒரு தேவையற்ற வீண் செலவுத் திட்டம்” என்றும் ‘சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினை (1350 மிமீ) முறையாகச் சேமித்து வைத்தாலே கூடுதலாகச் சுமார் 50 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்; சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையினை இதைக் கொண்டே நிறைவு செய்யலாம்” ...