புதிய பாதையாம்! புதிய இயக்கமாம்…! பிரமாதமாகப் பேசுகிறார் அண்ணாமலை…! கடந்த ஆறாண்டுகள் அண்ணாமலையின் அரசியல் எப்படியாக இருந்தது என்பதை அவதானிப்பவர்கள் பல உண்மைகளை உணரலாம்.  இவர் எத்தகையை திறமையாளர்? இவரை சரியாகப் புரிந்து கொள்வது எப்படி? எனப் பார்ப்போம்; அரசியல் புரிதலற்ற சாதாரண சராசரி அப்பாவி மனிதர்களிடம் அண்ணாமலையின் பேச்சு மிக வலுவான ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அடடா! ஊழல்வாதிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற இதோ ஒரு ரட்சகர் கிடைத்துவிட்டார் எனப் பலர் புளகாங்கிதம் அடைகின்றனர்…! அண்ணாமலை பேசுவதை அனைத்து ...