இந்தியாவிலேயே அதிக கவனம் பெற்ற தேர்தலாக மேற்கு வங்கத் தேர்தல் இரண்டு கட்டங்களாக (ஏப்ரல் 23 & 29) நடைபெறுகிறது.15 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு கோலோச்சும் மம்தா பானர்ஜியை வீழ்த்த பாஜக பெரும் பலத்தை பிரயோகிக்கிறது. வாக்காளர்கள் லிஸ்ட் மோசடிகள், மத்திய அதிகார பலம் நெருக்கடிகளை கடந்து மம்தா வெல்வாரா?; மேற்கு வங்கம் அரசியல் ரீதியாகவும் ,பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மாநிலமாகும். முதல் 20 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும், அடுத்து 34 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இடதுசாரிகளும் ...
















