கம்யூனிஸ்டுகள் கோலோச்சிய மேற்கு வங்கத்தில் நான்காவது முறையாக தொடர் வெற்றியை சாத்தியப்படுத்த மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் தீயாய் களம் கண்டுள்ளது. மம்தாவை வீழ்த்த காவிப் படை சகல அதிகார துஷ்பிரயோகங்கள், தந்திரோபாயங்கள் செய்கிறது. என்ன தான் நடக்கிறது மேற்கு வங்கத்தில்..? ஒரு அலசல்; இந்திய மாநிலங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு வங்கத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இங்கு வெற்றிக் கனியை பறிப்பவர்கள் இந்தியாவின் கிழக்கில் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டின் அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாகவே மாறுகிறார்கள் என்பது உண்மையே. 35 ஆண்டு ...
















