பாராளுமன்றத்தில் தன் அறிவார்ந்த, துணிவான பேச்சுக்களால் பெரும் கவனம் பெற்றுள்ளார் திரிணமுள் எம்.பி மஹீவாமொய்த்ரா! அநீதிகளைச் சாடுவதில் காட்டாற்று வெள்ளமென பொங்கி பிரவிக்கும் மொய்த்ரா இந்திய அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்! இவரது பின்னணி தான் என்ன? மஹீவா மொய்த்ராவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக அமைந்துவிடுகின்றன! அதற்கு அவர் மட்டுமல்ல, அவர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டும் ஒரு காரணமாகிவிடுகிறது. வங்க மண்ணில் ஒரு பெண் சிங்கமாக மம்தா கர்ஜித்துக் கொண்டிருக்க அதே மண்ணில் மற்றொரு பெண் சிங்கமாக தில்லி பாராளுமன்றத்தில் கர்ஜித்து வருகிறார் ...

‘’மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றிவிட்டது’’ என்று மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் சத்தியமான உண்மை! இந்தியாவின் கலாச்சார தலைநகரமான மேற்குவங்கத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் பெருங் கனவு! இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணில் பாஜகவிற்கு இடமில்லையே’ என்ற ஆதங்கம், ஆற்றாமை பாஜக தலைவர்களுக்கு நிறையவே உண்டு. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்குவங்கத்தை பெருங் கொலைக் களமாக்கியவர் இந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி! சூமுகமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் ...

இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான மேற்கு வங்கம் தற்போது இந்தியாவின் கலவர பூமியாக உருமாறியுள்ளது. நாளொரு துப்பாக்கி சூடு, பொழுதொரு கலவரம் என்று அல்லோகலப்படுகிறது. தேவையற்ற வகையில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி விசிட் செய்து அதகளப்படுத்துவது, மம்தாவின் உக்கிரமான எதிர்வினைகள்..என்பதான வங்கத்தில் யாருக்கு வாய்ப்பிருக்கிறது…? கம்யூனிஸ்டுகள் ஏன் காணாமல் போயினர்…? வங்கத்தை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும் என்று ஒட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை பிரயோகித்து, மம்தாவின் மாநில ஆட்சியை நிலைகுலைய செய்தது பாஜக! 20 க்கும் மேற்பட்ட எம்.பி, ...

சுயத்தை இழந்தவர்கள்,பயத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்! அரசியல் கார்ப்பரேட் பிசினஸாக உருமாறியுள்ளது என்பதற்கான அடையாளம் தான் பிரசாந்த் கிஷோரும்,அவரைப் போன்ற தேர்தல் வியூக நிறுவனங்களும்! மேற்குவங்கத்தில் திரிணமுள் காங்கிரசுக்கு தேர்தல்வியூக பொறுப்பை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கு தந்தார்! இது தற்போது திரிணமுள் காங்கிரசிற்குள் புயல்வீச காரணமாயிற்று! மேற்குவங்க ஆளும் கட்சியாக திரிணமுள் இருப்பதால் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இணையாக தனக்கும் Z கேட்டகிரியில் பாதுகாப்பை பெற்றுக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். மிக பிரமாண்ட கார்ப்பரேட் அலுவகம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பல லட்சங்கள் மற்றும் பல ...