தேர்தல் போட்டி என்பதைக் கடந்து ஒரு யுத்தமாக மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது! எல்லா நியாய அநியாயங்களையும் புறந்தள்ளி அழுத்தொழிப்பு அரசியலாக அது பரிமாணம் பெற்று வருவதை ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்துடன் பார்க்கிறது! தேர்தல் போட்டி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று! ஆனால், அது வங்கத்தை பொறுத்தவரை வக்கிரமான வடிவம் கொண்டு உக்கிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது! வகுப்புவாத, மதவாத அரசியல் தழைத்தோங்கும் மாநிலமாக தினம், தினம் ரத்தம் சிந்தும் பூமியாக அது நிறம் மாறிவருகிறது! ஒரு மிகப் பெரிய பாரதப் போர் நிகழ்வதற்கான முஸ்தீபுகள் ...

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக! இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத ...

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்த மண் தான் வங்கம்! முற்போக்கு சீர்திருத்ததிற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மீகத்திற்கு விவேகானந்தர், அரசியலுக்கு சுபாஷ் சந்திரபோஸ், கவிதை இலக்கியத்திற்கு தாகூர், நவீன கதை இலக்கியத்திற்கு சரத்சந்திரர், சேவைக்கு அன்னை தெரசா….என்று இந்தியாவின் ஆகச் சிறந்த ஆளுமைகளை தந்த அந்த கலாச்சார தலை நகரம் இன்று நாளும், பொழுதும் கலவரபூமியாக மாறிக் கொண்டுள்ளது கவலையளிக்கிறது! முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை இழந்தது ஒன்றும் அதிசயமல்ல! அரசியலில் தோல்விகள் வரும்,போகும்! ஆனால்,கட்சியே காணாமல் ...