அர்னாபின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவுமே புதிதல்ல! ஆனால், அரசியல் தரகராக அல்ல, ஆட்சியின் ஒர் அங்கமாகவே – பல சதி திட்டங்களின் பங்குதாராக – அர்னாப் இருந்துள்ளார் என்ற புரிதலையே பார்தோ தாஸ் குப்தாவுடனான அர்னாப் வாட்ஸ் அப் உரையாடல்கள் நிருபிக்கின்றன…! தேசபக்தியின் பெயரால் எந்த பஞ்சமா பாதங்களையும் செய்யக் கூடிய லைசென்ஸை பாஜக அரசு அர்னாப் கோஸ்வாமிக்கு தந்துள்ளது என்பதை என்னைப் போல ஊடகத்தில் இருக்கும் ஒரு சிலர் ஓயாமல் கூறி வந்ததற்கு சற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன ...