காட்டுயிர் என்பது காடுகளில் மட்டுமே வாழும் உயிரினம் என்று நினைத்து இருப்போம். உண்மை அப்படி இல்லை. மனிதர்கள் வளர்க்கும் உயிரினங்களாக, மனிதர்களை நம்பி வாழும் உயிரினங்களாக இல்லாமல் மனிதர்கள் அருகிலேயே இயற்கை சூழலில் இரையைத் தேடி வாழும் உயிரினங்கள் அனைத்தும் காட்டுயிராகும் என்று காட்டுயிர் ஆய்வாளர் ஜெகநாதன் குறிப்பிடுகிறார். காடுகள் என்பது உயிரினங்கள் மிகுதியாக இருக்கும் இடம் மட்டுமே. ஏன் நம் வீட்டில் வாழும் எலியும் ஒரு காட்டுயிராகும். இயற்கையாகவே உலகமே ஒரு காடுதான். பல ஆயிரம் வருடங்களாக மனிதன் காடுகளில் தான் வாழ்ந்தான். ...