பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில ...

தெருவில் இறங்கி போராடும் களப் போராளி! அஞ்சாமையின் இலக்கணம்! மதவாத சக்திகளின் மாபெரும் விரோதி என்பதெல்லாம் சரி தான்! அதற்காக மம்தாவை அகில இந்திய தலைவராக – அடுத்த பிரதமராக – ஏற்க முடியுமா..? நாட்டிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேராபத்தாக பார்க்கப்படும் பாஜகவோடு மோதி வெல்லும் ஆற்றல் உள்ள இந்தியாவின் ஆகச் சிறந்த போராளி மம்தா பானர்ஜி என்பதில் நமக்கு மாற்று கருத்தே இருக்க முடியாது. ஆட்சியில் உள்ள எதிர்கட்சி முதல்வர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு பணிந்து போகின்ற நிலையில், ...